\
’ஈஸ்வரன்’ வெளியாகும் அன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

’ஈஸ்வரன்’ வெளியாகும் அன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

’ஈஸ்வரன்’ வெளியாகும் அன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!
Published on

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால், அப்படம் கைவிடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மீண்டும் தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இரு தரப்பும் ஒற்றுமையாக இருந்தாலும் கொரோனா தடையாக மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கியதால் நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் நடந்துவருகிறது.

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில், வரும் பொங்கலுக்கு ‘மாநாடு’ மோஷன் போஸ்டர் வெளியாகு என்று அறிவித்துள்ளது படக்குழு. சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com