movie list
movie listpt

மாமன் முதல் DD Next Level வரை... இந்த வார OTT, தியேட்டர் லிஸ்ட்!

இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் விவரங்கள் இதோ!

1. Series

Hai Junoon (Hindi) Jio Hotstar - May 16

அபிஷேக் ஷர்மா இயக்கியுள்ள சீரிஸ் `Hai Junoon'. இரு குழுவுக்கு இடையிலான போட்டியே கதை.

2. Duster (English) Jio Hotstar - May 16

J. J. Abrams மற்றும் LaToya Morgan உருவாக்கியுள்ள சீரிஸ் `Duster'. முதல் கறுப்பின பெண் FBI ஏஜென்ட் ஒருவர் தன் திறமையான கேட் அவே டிரைவருடன் இணைந்து குற்றங்களை நிறுத்த போராடுவதே கதை.

3. OTT

Anaganaga (Telugu) E TV win - May 15

சன்னி சஞ்சய் இயக்கத்தில் சுமன் நடித்துள்ள படம் `Anaganaga'. ஒரு பள்ளி ஆசிரியரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை.

4. Bhool Chuk Maaf (Hindi) - May 16

கரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வாமிகா கபி நடித்துள்ள படம் `Bhool Chuk Maaf'. பனாரசை சேர்ந்த ரஞ்சன் திருமணத்திற்கு பிறகு வேண்டுதல் ஒன்றை மறந்துவிட, அதன் பின் நடப்பவையே கதை.

5. Post Theatrical Digital Streaming

Maranamass (Malayalam) Sony LIV - May 15

சிஜு சன்னி இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்த படம் `Maranamass'. ரிப்பர் சந்திரன் என்ற கிரிமினலை பிடிக்கும் முயற்சிகளில் நடக்கும் கலாட்டாவே கதை.

6. Nesippaya (Tamil) Sun NXT - May 16

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்த படம் `நேசிப்பாயா'. அர்ஜுன் தன் முன்னாள் காதலியை காப்பாற்ற செய்யும் செயல்களே கதை.

7. Wolfman (English) Prime - May 17

Leigh Whannell இயக்கியுள்ள படம் `Wolfman'. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.

8. Maaman (Tamil) - May 16

Theatre

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ள படம் `மாமன்'. ஒரு மாமனுக்கு, அவனது மருமகனுக்கும் இடையேயான அன்பை பேசும் படம்.'

9. DD Next Level (Tamil) - May 16

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் `டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. பேயிடம் சிக்கும் இளைஞனின் தப்பிக்கும் முயற்சிகளே கதை.

10. Eleven (Tamil) - May 16

லோகேஷ் அஜீஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்துள்ள படம் `லெவன்'. நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளை செய்வது யார் என்ற விசாரணையே கதை.

11. Jora Kaiya Thattunga (Tamil) - May 16

வினீஷ் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் `ஜோரா கைய தட்டுங்க'. மேஜிக் கலைஞர் ஒருவருக்கு வரும் சிக்கலும், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுமே கதை.

12. Lovely (Malayalam) - May 16

திலேஷ் கருணாகரன் இயக்கத்தில் மேத்திவ் தாமஸ் நடித்துள்ள படம் `Lovely'. கனடா செல்லும் கனவுகளுடன் இருந்த போனி, எதிர்பாராத விதமாய் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவனுடன் நட்பாகிறது ஒரு ஈ. அதன் பின் நடப்பவையே கதை.

13. Sister Midnight (Hindi) - May 16

கரண் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் `Sister Midnight'. புதிதாக திருமணமான பெண்ணின் கதையை காமெடி கலந்து சொல்லும் படம்.

14. Final Destination Bloodlines (English) - May 16

Zach Lipovsky, Adam Stein இயக்கியுள்ள `Final Destination Bloodlines'. ஐந்து பாகங்களாக தொடரும் சாபம், ஆறாவது பாகத்தில் யார் யாரை பழி தீர்க்கிறது என்பதே கதை.

15. Mission: Impossible - The Final Reckoning (English) - May 17

Christopher McQuarrie இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடித்துள்ள படம் `Mission: Impossible - The Final Reckoning'. 2023ல் வெளியான Mission: Impossible – Dead Reckoning Part One படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com