‘விசிறி’40 லட்சம் ரசிகர்கள்: தாமரை நன்றி

‘விசிறி’40 லட்சம் ரசிகர்கள்: தாமரை நன்றி
‘விசிறி’40 லட்சம் ரசிகர்கள்: தாமரை நன்றி

’விசிறி’பாடல் 40 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளதை அடுத்து பாடலாசிரியர் தாமரை ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் இடம் பெற்றுள்ள ‘விசிறி’ பாடல் யுடியூப்பில் வெளியிடப்பட்டது. அப்பாடல் வெளியானது முதலே பெரிய வரவேற்பு நிலவியது. தர்புகா சிவாவின் இசை பலரால் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் கவிஞர் தாமரை தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் உருவான விதம் குறித்தும் அமோக ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் ஒரு நிலைத் தகவல் இட்டுள்ளார். அதில், “ 'விசிறி', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பாடல். இது வெளியான 25 நாட்களில் 40 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்டது. மிகச் சவாலான பாடலாக இருந்தது. இதனை வெற்றிப்பெற செய்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com