\
”நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன் ” : இளையராஜாவிடம் இசை கற்கும் லிடியன் நாதஸ்வரம்

”நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன் ” : இளையராஜாவிடம் இசை கற்கும் லிடியன் நாதஸ்வரம்

”நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன் ” : இளையராஜாவிடம் இசை கற்கும் லிடியன் நாதஸ்வரம்
Published on: 

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

பியானோ சாதனையாளரும் இசையமைப்பாளருமான லிடியன் நாதஸ்வரம் தற்போது மோகன்லாலின் ‘பரோஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதேசமயம், இளையராஜாவிடம் இசையைக் கற்று வருகிறார். இந்த நிலையில், இன்று இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இளையராஜா பியானோ வாசிக்க.. லிடியன் கிடார் வாசிக்கும் புகைப்படங்களுடன் “என்னுடைய இசை ஆசிரியர் இளையராஜா என்னிடம், ‘நான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன்’ என்றார். தினமும் எனக்கு அன்புடனும் அரவணைப்புடனும் இசையைப் பயிற்றுவிக்கிறார். உங்களுடைய வாழ்த்தும் ஆசிர்வாதமும் வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com