தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு...லைகா அதிரடி

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு...லைகா அதிரடி
தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு...லைகா அதிரடி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் ’ஸ்பைடர்’ படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ்பாபு நடித்திருக்கும் படம் 'ஸ்பைடர்'. மகேஷ் பாபுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள், விற்பனை சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் லைகா நிறுவனம் தமிழில் தயாரித்த கத்தி திரைப்படம் பல தடைகளை தாண்டி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் அள்ளியது. இதேபோல் தற்போது லைகா நிறுவனம் ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகிவரும் ஸ்பைடர் திரைப்படதின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிரவைத்துள்ளது. தமிழில் விஜய்யை வைத்து கத்தி, தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் என அதிரடி காட்டி வருகிறது லைகா நிறுவனம்

ஏற்கனவே இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் டிரெய்லரை மகேஷ்பாபு பிறந்தநாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. மேலும் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com