\
அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமை - லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமை - லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமை - லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
Published on

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கும் படம் ‘துணிவு’. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தகவல்கள் உலா வந்தநிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சியும், ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளநிலையில், அந்தப் படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com