\
மோகன்ராஜா இயக்கத்தில் ’லூசிபர்’ தெலுங்கு ரீமேக் - மோகன்லால் வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!

மோகன்ராஜா இயக்கத்தில் ’லூசிபர்’ தெலுங்கு ரீமேக் - மோகன்லால் வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!

மோகன்ராஜா இயக்கத்தில் ’லூசிபர்’ தெலுங்கு ரீமேக் - மோகன்லால் வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!
Published on

மோகன்ராஜா இயக்கத்தில் ’லூசிபர்’ தெலுங்கு ரீமேக்; மோகன்லால் வேடத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் பிரித்திவிராஜ் இயக்குநராக அறிமுகமாகி இயக்கிய ‘லூசிபர்’ படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானதோடு வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. மோகன்லால், விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார் உட்பட பலர் போட்டிப்போட்டு நடித்து பாராட்டுக்களை குவித்தனர். அரசியல்வாதி மறைவுக்குப் பிறகு மருமகனுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் ஏற்படும் மோதலே கதை. இதனை சுவாரசியமான திரைக்கதைமூலம் பல ட்விஸ்டுகளால் காட்சிப்படுத்தி ரசிக்கவைத்தார் பிரித்திவிராஜ்.

இப்போதும் இப்படத்தை திரும்ப பார்த்தாலும் சலிப்பதே இல்லை என்கின்றனர் சினிமா ரசிகர்கள். இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். சிரஞ்சீவி மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார். மஞ்சு வாரியார் கேரக்டரில் அவரே நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இன்று நடந்த இப்படத்தின் பூஜையில் மோகன்ராஜா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com