\
குடும்பத்துடன் ஃபகத், துல்கர் சல்மான், பிரித்விராஜ்: ஹார்ட்டின்களை அள்ளிய வைரல் புகைப்படம்

குடும்பத்துடன் ஃபகத், துல்கர் சல்மான், பிரித்விராஜ்: ஹார்ட்டின்களை அள்ளிய வைரல் புகைப்படம்

குடும்பத்துடன் ஃபகத், துல்கர் சல்மான், பிரித்விராஜ்: ஹார்ட்டின்களை அள்ளிய வைரல் புகைப்படம்
Published on: 

மலையாளத்தின் முப்பெரும் முன்னணி நடிகர்களான ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், பிரித்விராஜ்  தங்களது குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் நடிகை நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.

நடிகர் ஃபகத் ஃபாசில் தனது மனைவி நடிகை நஸ்ரியா, துல்கர் சல்மான் மனைவி அமல் சுபியா, நடிகர் பிரித்விராஜ் அவரது மனைவி சுப்ரியா  ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினை நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மூவரும் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நட்பைப்போற்றும் விதமாக குடும்பத்துடன் ஒன்றுகூடி குதூகலித்துள்ளார்கள்.  இந்தப் புகைப்படத்தை நஸ்ரியா பகிர்ந்த 2 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்ஸ்களைக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விரைவில் பிரித்விராஜ் நடிப்பில் ‘கோல்ட் கேஸ்’, ஃபகத் ஃபாசில் நடிப்பில் ‘மாலிக்’ படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com