lik
likfb

LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதியினை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, படத்தின் நாயகியாக கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று படத்திற்கு டைட்டில் வைக்க இதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இதனை சுருக்கமாக LIC என்று அழைத்தனர். இதற்கும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து LIC என்று இருந்ததை LIK இன்று மாற்றிவிட்டனர். மேலும், இப்படத்தின் கதை தொடர்பான சில விஷயங்களும் இணையத்தில் வெளியாகி விவாதமாக மாறியது . இப்படி பல சர்ச்சைகளில் இப்படம் சிக்கியிருந்தாலும், விக்னேஷ் சிவனின் இயக்கம் என்பதாலும், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு என்பதாலும் அதற்கு தனி ரசிகர்கள் இருப்பார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இந்தவகையில்தான், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில்,

வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி LIK திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com