ஓடிடியில் வெளியாகும் ‘கூகுள் குட்டப்பா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் ‘கூகுள் குட்டப்பா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஓடிடியில் வெளியாகும் ‘கூகுள் குட்டப்பா’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

’பிக்பாஸ்’ தர்ஷன் - லாஸ்லியாவின் நடிப்பில் கடந்த மே 6 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’ கலவையான விமர்சங்களைப் பெற்றது. மலையாளத்தில் சுராஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக்காகியுள்ளது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி முடித்துள்ளனர். தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடித்துள்ளார்கள்.

தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, கே.எஸ் ரவிக்குமாருடன் ரோபோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது.  படம் வெளியாகி 29 நாட்கள் கழிந்த நிலையில் வரும் ஜூன் 3 ஆம் தேதி ‘கூகுள் குட்டப்பா’ ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com