\
லாஸ்லியா - தர்ஷனின் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் நடிகர் சூர்யா

லாஸ்லியா - தர்ஷனின் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் நடிகர் சூர்யா

லாஸ்லியா - தர்ஷனின் ‘கூகுள் குட்டப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் நடிகர் சூர்யா
Published on

’பிக்பாஸ்’ தர்ஷன் - லாஸ்லியா நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா நாளை வெளியிடுகிறார்.

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர்.

தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார்கள். படத்திற்கு 'கூகுள் குட்டப்பா ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுகிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com