”சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது” - பாக்யராஜ்

”சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது” - பாக்யராஜ்

”சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது” - பாக்யராஜ்
Published on

”சமீபத்தில் வெளியான சில படங்களைப் பார்க்கும்போது பொதுநல வழக்கு போடும் எண்ணம் வருகிறது” என்று இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார்.

இன்று சென்னையில் நடந்த 'கடைசி காதல் கதை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், சீனு ராமசாமி, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட இயக்குநர்கள் படத்தை வாழ்த்தி பேசினர். அப்போது பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”நேற்று விபத்தில் இறந்த முப்படை தளபதி, அவரின் மனைவி மீதமுள்ள 11 பேருக்காக வருந்துகிறேன். கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால், தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொதுநல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com