\
’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்!

’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்!

’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்!
Published on

விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார். 

பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார் எஸ்.பி.ராஜ்குமார். ஆனால், அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்தப் படத்தை வைத்து தற்போது வரை மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ’பார்க்கணும்போல இருக்கு’ படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார். இந்தப் படத்தில் திரைப்பட விநியோகிஸ்தரான பரதன், த்ரிஷியம் படத்தில் நடித்த அன்சிபா ஆகியோர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது படக்குழு. இந்தப் படத்தின் ’ரெட்ட ஜடை கூப்பிடுதே’ என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சூரி, கஞ்சா கருப்பு, லிவிங்க்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com