“இது ஒரு இமாலய வேலை.. என்னை நம்பிய விஜய்க்கு நன்றி” - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

“இது ஒரு இமாலய வேலை.. என்னை நம்பிய விஜய்க்கு நன்றி” - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

“இது ஒரு இமாலய வேலை.. என்னை நம்பிய விஜய்க்கு நன்றி” - லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி
Published on

இது ஒரு இமாலய வேலை; நம்பியதற்காக நன்றி என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனிடையே கடந்த 29 ஆம் தேதி விஜயின் மேனேஜர் ஜெகதீஷ், அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அந்தப் பதிவில் ஜெகதீஷ், “அற்புதமாக இருந்த சில மாதங்கள் நிறைவடைந்தன. ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. விஜய்க்கும் விஜய்சேதுபதிக்கும் இதயம் நிறைந்த நன்றி. சிரித்த முகத்துடன் சிரித்த கண்களுடன் ‘மாஸ்டர்’ படத்தை கொண்டாட காத்திருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது படக்குழுவினருடன் ஒரு புகைப்படத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்து. முகத்திலும் கண்களிலும் அதற்கான புன்னகை இது. 129 நாட்கள் படிப்பிடிப்பு முடிந்தது. இதயத்திற்கு நெருக்கமான பயணம் இது. அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “என்னையும் என் அணியையும் நம்பியதற்காக விஜய்க்கு நன்றி. இது ஒரு இமாலய வேலை, எளிதானதல்ல; இது எனது படக்குழு. பெருமிதம் கொள்கிறேன் தோழமைகளே” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com