”ரஜினி-கமல் இருவரையும் வைத்து படம் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியானது..” லோகேஷ் பகிர்ந்த தகவல்!
ரஜினி-கமல் இருவரையும் வைத்து, தான் ஒரு திரைப்படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
ரஜினி கமல் இருவரையும் வைத்து படம்..
கமல்ஹாசனை நாயகனாக வைத்து ’விக்ரம்’, ரஜினிகாந்தை நாயகனாக வைத்து‘கூலி’ திரைப்படங்களை இயக்கியுள்ள லோகேஷ் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினி-கமல் இருவரையும் வைத்து படம் இயக்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
கமல்ஹாசனின் தயாரிப்பில் ரஜினியை நாயகனாக வைத்து ஒருகேங்ஸ்டர் திரைப்படத்தை தான் இயக்கவிருந்ததாக லோகேஷ் கூறியுள்ளார். இரண்டு முதிய கேங்ஸ்டர்கள் பற்றிய அந்தக் கதையில் கமல்ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ’ஜெயிலர்’, ’ விக்ரம்’ படங்களுக்குப் பின் ரஜினி, கமல் படங்களின் பொருட்செலவும் சந்தை மதிப்பும் பலமடங்கு அதிகரித்து விட்டதால் கைவிடப்பட்ட அந்தப் படத்தை இப்போது தொடங்குவது எளிதல்ல என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் கமல்ஹாசனின் விக்ரம் -2 இயக்கும் திட்டமிருப்பதாகவும் கனகராஜ் கூறியுள்ளார்.