\
”விளையாட்டுப் படங்களில் ’சார்பட்டா பரம்பரை’ ஒரு மைல் கல்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

”விளையாட்டுப் படங்களில் ’சார்பட்டா பரம்பரை’ ஒரு மைல் கல்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

”விளையாட்டுப் படங்களில் ’சார்பட்டா பரம்பரை’ ஒரு மைல் கல்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
Published on

‘சார்பட்டா பரம்பரை’ படம் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.

ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள்,வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “விளையாட்டுப் படங்களில் 'சார்பட்டா பரம்பரை’ ஒரு மைல் கல். இப்படியொரு படத்தை கொடுத்ததற்கு நன்றி பா.ரஞ்சித் அண்ணா. ஆர்யா உள்ளிட்டப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார் 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com