உருவாகிறது LOKAH 2... இவர்தான் ஹீரோ! | WCU | Lokah Chapter 2
கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் டோம்னிக் அருண் இயக்கிய மலையாளப்படம் `Lokah Chapter 1: Chandra'. இப்படத்தை துல்கர் சல்மானின் ` Wayfarer Films' தயாரித்தது. ஆகஸ்ட் 28ல் வெளியான இப்படம், மிகப்பெரிய ஹிட்டாகி உலகளவில் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், மிகப்பெரிய வசூல் செய்த மலையாளப்படம் என்ற பெருமையை அடைந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாகங்களாக இன்னும் 5 பாகங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என அறிவித்தார் துல்கர் சல்மான். சூப்பர் ஹீரோ படமாக உருவான இதில், துல்கர், டொவினோ உட்பட பலரும் கெஸ்ட் ரோலில் சூப்பர் ஹீரோக்களாக நடித்திருந்தனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்படம் உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதில் முதலாவதாக டொவினோ நடித்த மைக்கேல் பாத்திரத்தை மையமாக வைத்து Lokah 2 படம் உருவாகிறது. இந்த பாகத்தையும் டோம்னிக் அருண்தான் இயக்குகிறார். அதனை ஒட்டு மொத்தமாக Wayfarer Cinematic Universe அதாவது WCU என்ற குடையில் கீழ் கொண்டுவர உள்ளனர். இதற்கான ஒரு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் டொவினோ நடித்த பாத்திரமான மைக்கேல், தன் சகோதரன் வெளியானதாகவும் அவனை சமாளிக்க துல்கர் சல்மானின் சார்லி பாத்திரத்திடம் உதவி கேட்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த பாகம் மைக்கேலின் ஆபத்தான சகோதரனுடன் மோதுவது பற்றிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. லோகா படத்தின் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.