'சிறுவயதில் ஒருவர் என்னை தகாத முறையில் தொடுவார்' - கங்கனா ரனாவத் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

'சிறுவயதில் ஒருவர் என்னை தகாத முறையில் தொடுவார்' - கங்கனா ரனாவத் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

'சிறுவயதில் ஒருவர் என்னை தகாத முறையில் தொடுவார்' - கங்கனா ரனாவத் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
Published on

சிறு வயதில் தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

ஒடிடி தளத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி 'லாக் அப்'. 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி 72 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதில் அமெரிக்க சிறை போன்ற செட்டில் போட்டியாளர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பகிர்ந்து வரும் அந்தரங்க ரகசியங்கள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் 'லாக் அப்' 56வது நாளில் கலந்து கொண்ட முனாவர் ஃபாருக்கி என்ற போட்டியாளர், தாம் சிறு வயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 6 வயதில் தொடங்கிய இந்த பாலியல் தொல்லை 11 வயது வரை தொடர்ந்தது. அதுபற்றி என்னால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. இதுகுறித்து எனது குடும்பத்தினர் உள்பட யாரிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டவர்கள் எனது உறவினர்கள்தான் என்று தெரிவித்தார்.

முனாவர் ஃபாருக்கி துணிச்சலுடன் பேசியதை பாராட்டிய நடிகை கங்கனா ரனாவத் தனது சிறுவயதில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்துப் பேசிய அவர், "நான் வசித்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் அடிக்கடி என்னை தகாத முறையில் தொடுவார். அந்த வயதில் எனக்கு எதுவும் புரியவில்லை. அவர் என்னை விட 3 அல்லது 4 வயது மூத்தவர். எங்கள் அனைவரையும் அழைத்துவந்து உடைகளை அவிழ்க்க சொல்லுவார். அந்த நேரத்தில் இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், குழந்தைகள் இது போன்ற சம்பவங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவே அவர்களிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி கற்றுக்கொடுக்கவேண்டும்" என்று கங்கனா தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்: கேஜிஎஃப் 2 இந்தி பதிப்பின் வசூல் ரூ. 300 கோடியை நெருங்கியது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com