லால்சலாம்.. லவ்வர்.. இமெயில்.. இப்படிக்கு காதல்.. இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
Series
One Day (English) Netflix - Feb 8
David Nicholls எழுதி 2009ல் வெளியான நாவல் `One Day'. 2011ல் இது படமாகவும் வெளியானது. இப்போது Molly Manners இதை சீரிஸாக எடுத்துள்ளார். Emma மற்றும் Dexter இவர்களின் காதல் தான் சீரிஸின் கதை.
Jai Mahendran (Malayalam) SonyLIV - Feb 9
ஸ்ரீகாந்த் மோகன் இயக்கத்தில் சய்ஜூ குரூப், மியா ஜார்ஜ் நடித்துள்ள சீரிஸ் `Jai Mahendran'. மகேந்திரன், கரப்டான தாசில்தார். அதன் விளைவாக, அவர் வேலைக்கே ஒரு ஆபத்து வர, அதைக் காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார் என்பதே கதை.
Aarya Season 3: Part 2 (Hindi) Hotstar - Feb 9
சுஷ்மிதா சென் நடித்து 2020ல் வெளியான சீரிஸ் `Aarya’. பரபரப்பான க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் மிரட்டியது முதல் சீசன். இப்போது மூன்றாவது சீசனில் மீதமுள்ள எப்பிசோடை வெளியிடுகிறார்கள்.
Documentary
Lover, Stalker, Killer (English) Netflix - Feb 9
காதலில் துவங்கி க்ரைமில் முடிந்த ஒருவரின் வாழ்க்கை தான் `Lover, Stalker, Killer’ ஆவணப்படம். மெக்கானிக் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கில் துணை தேடப் போய், அதன் பின் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அது என்ன? என்பதை அதிர்ச்சி தெறிக்க சொல்கிறார்கள்.
OTT
Ippadikku Kadhal (Tamil) Aha - Feb 9
`இஃக்லூ’ படம் மூலம் கவனம் ஈர்த்த பரத் மோகன் தற்போது இயக்கியிருக்கும் படம் `இப்படிக்கு காதல்’. பரத், ஜனனி நடிப்பில் ஒரு ரிலேஷன்ஷிப் ட்ராமாவாக படம் உருவாகியிருக்கிறது..
Bhakshak (Hindi) Netflix - Feb 9
புமி பெட்னகர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `Bhakshak’. பெண் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமையை வெளிச்சத்துக் கொண்டு வர போராடும் பத்திரிகையாளரின் பயணமே படத்தின் கதை.
Lantrani (Hindi) Zee5 - Feb 9
Gurvinder Singh, Kaushik Ganguly, மற்றும் Bhaskar Hazarika இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆந்தாலஜி படம் `Lantrani’. இந்தியாவின் சிறு நகரங்கள், கிராமங்களில் வசிக்கும் மனிதர்களின் கதையை சொல்கிறது படம்.
Suncoast (English) Hotstar - Feb 9
Laura Chinn இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Suncoast’. உடல்நிலை சரி இல்லாத தன் சகோதரனை கவனித்துக் கொண்டு வாழும் ஒரு இளம் பெண்ணைப் பற்றிய கதை.
Post Theatrical Digital Streaming
The Passenger (English) Prime - Feb 4
Carter Smith இயக்கிய படம் `The Passenger’. தனது பயங்களை சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவனைப் பற்றிய படம்.
The Marvels (English) Hotstar - Feb 7
கேப்டன் மார்வலும் - மிஸ் மார்வலும் இணைந்து தீய சக்தியை எதிர்த்து போராடுவதே `The Marvels' படத்தின் கதை.
Captain Miller (Tamil) Prime - Feb 9
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் `கேப்டன் மில்லர்’. ஒரு பக்கம் ப்ரிட்டிஷ் ஆதிக்கம், இன்னொரு பக்கம் ஊரை ஆளும் அரசனின் அடக்குமுறை. இந்த இரண்டுக்கும் எதிராக கிளம்பும் இளைஞனின் கதையே படம்.
Ayalaan (Tamil) SunNXT - Feb 9
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் `அயலான்’. பூமியை காப்பாற்ற வரும் ஏலியன், அதற்கு உதவும் ஹீரோ. இருவரும் இணைந்து வில்லனை எப்படி அழிக்கிறார்கள் என்பதே கதை.
Guntur Kaaram (Telugu) Netflix - Feb 9
த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த படம் `Guntur Kaaram’ சிறுவயதிலேயே தாயால் கைவிடப்பட்ட ஹீரோ, வளர்ந்து அந்த தாய்க்கு வரும் ஆபத்துகளை தடுக்கிறார். தாயும் மகனும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.
Bubble Gum (Telugu) Aha - Feb 9
Kshanam படம் மூலம் கவனம் ஈர்த்த ரவிகாந்த் இயக்கத்தில் உருவான படம் `Bubble Gum'. ஆதி - ஜான்வி இருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்களின் காதலில் வரும் சிக்கல்கள் என்ன? அவை சரியாகிறதா இல்லையா என்பதே கதை.
Kaatera (Kannada) Zee5 - Feb 9
சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் நடிப்பில் வெளியான படம் `Kaatera’. 1970களின் பின்னணியில் விவசாயிகள் பிரச்சனையைப் பற்றி பேசும் படம்.
Palasher Biye (Bengali) Zee5 - Feb 9
Mimi Chakraborty, Somraj Maity நடித்திருக்கும் படம் `Palasher Biye'. பலாஷ் தனது சொந்த ஊர் மீது பாசம் கொண்டிருப்பவர். அவனுக்கு ஷாலினியைப் பார்த்ததும் காதல். ஆனால் அவளின் விருப்பங்கள் முற்றிலும் பலாஷ்க்கு நேரெதிரானவை. இவர்களின் காதல் என்னாகிறது என்பதே கதை.
Khichdi 2: Mission Paanthukistan (Hindi) Zee5 - Feb 9
2002ல் ஹிட்டான டிவி தொடர் Khichdi. அதனை 2010ல் சினிமாவாக மாற்றினார்கள். இப்போது அதன் இரண்டாம் பாகமாக Khichdi 2: Mission Paanthukistan வந்தது. Paanthukistan ராஜாவின் சாயலில் ஒருவன் கிடைக்க, அவரை வைத்து ஒருவர் போடும் திட்டங்களும், நடக்கும் கலாட்டாக்களுமே கதை.
The Underdoggs (English) Prime - Feb 9
Snoop Dogg லீட் ரோலில் நடித்திருக்கும் படம் `The Underdoggs'. பிரபல கால்பந்து நட்சத்திரம் செய்த குற்றத்துக்காக வினோதமான தண்டனை வழங்குகிறது நீதிமன்றம். ஒரு மோசமான டீமிற்கு கால்பந்து கற்றுத்தர வேண்டும். அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
Puppy Love (English) Lionsgate Play- Feb 9
Nick Fabiano மற்றும் Richard Alan Reid இயக்கத்தில் வெளியான படம் `Puppy Love'. Nicole மற்றும் Max டேட்டிங் சொதப்பலில் முடிகிறது. இருந்தும் அவர்களது வளர்ப்பு பிராணிகளால் மீண்டும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
Theatre
Lal Salaam (Tamil) - Feb 9
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ள படம் `லால் சலாம்’. மத நல்லிணக்கத்தை, கிரிக்கெட் மூலம் சொல்லக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது.
Lover (Tamil) - Feb 9
Livin’ வெப் சீரிஸ் மூலம் கவனம் கவர்ந்தவர் பிரபுராம் வியாஸ். இப்போது மணிகண்டன், ஸ்ரீ கௌரி ப்ரியா, கண்ணா ரவி நடிப்பில் `லவ்வர்’ படத்தை இயக்கியிருக்கிறார். அருண் - திவ்யா காதலில் வரும் பிரச்சனைகள் என்ன என்பதே கதை.
E-mail (Tamil) - Feb 9
ராஜன் இயக்கத்தில் அஷோக், ராகினி திவேதி நடித்திருக்கும் படம் `இ மெயில்’. ஆன்லைன் விளையாட்டில் நடக்கும் பிரச்சனைகளும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம்.
Eagle (Telugu) - Feb 9
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள படம் `Eagle’. ஈகில் என்ற ஸ்னைபர் செய்யும் அதிரடி ஆக்ஷனே படம்.
Anweshippin Kandethum (Malayalam) - Feb 9
Darwin Kuriakose இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் `Anweshippin Kandethum'. கேரளாவை அதிர வைக்கும் இரு குற்ற சம்பவங்கள், அதை விசாரிக்கும் காவலதிகாரி இதுவே படத்தின் களம்.
Premalu (Malayalam) - Feb 9
Thanneer Mathan Dinangal, Super Sharanya என இரண்டு சிறப்பான படங்களைக் கொடுத்த கிரிஷ், தற்போது இயக்கியுள்ள படம் `Premalu'. சச்சினுக்கு வரும் காதல், அதனால் அவன் வாழ்வில் நிகழும் விஷயங்களே படத்தின் கதை.
Teri Baaton Mein Aisa Uljha Jiya (Hindi) - Feb 9
Amit Joshi மற்றும் Aradhana Sah இயக்கியுள்ள படம் `Teri Baaton Mein Aisa Uljha Jiya'. ஆர்யனுக்கு சிஃப்ராவைப் பார்த்ததும் காதல். ஆனால் அவள் பெண்ணல்ல, ஒரு ரோபோ எனத் தெரிந்த பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
Monster (Japanese) - Feb 9
Shoplifters, Broker போன்ற படங்கள் மூலம் கவனம் கவர்ந்த Hirokazu Kore-eda, தற்போது இயக்கியுள்ள படம் `Monster’. இரண்டு மாணவர்களுக்கு பள்ளியில் நடக்கும் சம்பவங்கள், எப்படி அவர்கள் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும், தன் பாலின ஈர்ப்பு பற்றியும் மென்மையாக பேசுகிறது படம். சென்ற வருடமே வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது படம். தற்போது இந்தியாவில் வெளியாகிறது.
The Iron Claw (English) - Feb 9
Sean Durkin இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Iron Claw'. 80களில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்ட Von Erich brothers பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.