AJITH KUMAR RACING
AJITH KUMAR RACINGWEB

Racer AK கடந்து வந்த பாதை - 3 நொடிகளில் 100 kmph வேகத்தில் சீறிப்பாயும் கார்!

துபாயில் நடைபெறும் 24hrs ரேஸிங் சீரிஸ் என்றால் என்ன ? அதில் அஜித் பயன்படுத்துவது எந்த கார்..? அதன் சிறப்பம்சங்கள் என்ன..? என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்
Published on

1986ல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமல் பாதியில் கல்வியை இடைநிறுத்திய அஜித் விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, 1992ம் ஆண்டில் "பிரேம புஸ்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதன் பிறகுதான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க அஜித்துக்கு வாய்ப்பு கிடைத்தது.

இப்படி திரைப்பயணத்தை தொடங்கிய அஜித்குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆண்டில் வெளியான "ஆசை" திரைப்படம். அப்போது மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

காதல் மன்னன் திரைப்படம்
காதல் மன்னன் திரைப்படம்

பின்னர், 2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டதால், திரைப்படங்களில் நடிக்க இது தடையாக அமைந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான ‘என்னை தாலாட்ட வருவாளா’ திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அந்த கால கட்டத்தில்தான் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார் நடிகர் அஜித்.

AJITH KUMAR RACING
இந்தியாவில் ரூ. 8.95 கோடியில் அறிமுகமானது Rolls-Royce Ghost Series 2!

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியில் வெற்றி பெற்றது. பின்னர் 2010-ல் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அசல் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனதால் மோட்டார் பந்தயங்களில் கவனத்தை திருப்பினார் அஜித்.

AJITH KUMAR RACING
AJITH KUMAR RACINGWEB

அதன் பின்னர், வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். அடுத்து 2013-ல் ஆரம்பம் திரைப்படத்தில் நடித்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் மக்களிடம் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார். அதன் பின்னர், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அஜித்.

AJITH KUMAR RACING
அறிமுகமாகும் புதிய ஹோண்டா Hybrid-Electric Sport Car... எப்போது தெரியுமா?

அதன்ப்பின்னரும் ரசிகர்களை திருப்திப்படுத்த அவர் செய்த விஷயங்கள் ஏராளம். இந்நிலையில் இனி அவர் ரேஸிங் செய்ய முடியாது என கூறிய நிலையில் மீண்டும் 13 வருடங்கள் கழித்து விடாமுயற்சியோடு Michelin 24th DUBAI 2025 போட்டியில் களமிறங்கியுள்ளார் நடிகர் அஜித். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் அவரா செதுக்குவது போல் எக்காரணத்தை கொண்டும் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் கைவிட கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிவருகிறார் நடிகர் அஜித்குமார்.

அவர் நடித்த படங்களின் update-களை விட, அவர் வாழ்க்கையில் மேம்படுத்திக்கொண்ட update-கள் ஏராளம்..

AJITH KUMAR RACING CAR
AJITH KUMAR RACING CARWEB

சரி... துபாயில் நடைபெறும் 24hrs ரேஸிங் சீரிஸ் என்றால் என்ன ? அதில் அஜித் பயன்படுத்துவது எந்த கார்..? அதன் சிறப்பம்சங்கள் என்ன பார்க்கலாம்.

அஜித் பயன்படுத்தும் Race காரணாது Porshe 911 Gt3 Rs ஆகும். இதன் Aerodynamic Design-னால் மணிக்கு 296 கிமீ வேகத்தில் செல்லும். 386 kW (525 PS) பவருடன், 9000rpm மூலம் சுமார் 3.2 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும்.

6 Cylinder, pdk transmission (Porsche Doppel Kupplung) மூலம் 8 Gears கொண்ட இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 3.51 கோடி. இந்த கார் முழுக்க முழுக்க ரேசுக்காக தயாரிக்கப்பட்டாலும் இது ஒரு Road-Legal கார்தான். இந்தியாவில் பலர் வைத்துள்ளனர், முக்கியமாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் வைத்திருக்கிறார்.

NAGA CHAITANYA PORSCHE 911 GT3 RS
NAGA CHAITANYA PORSCHE 911 GT3 RSWEB

வருடா வருடம் இந்த காருக்காக நடத்தப்படும் Race-தான் 992 endurance race. இதுதான் தற்போது 2025 ஆண்டிற்காக PORSCHE MOTORSPORT-ஆல் நடத்தப்படும் Michelin 992 Endurance Cup-ற்கான போட்டி. இதில்தான் நடிகர் அஜித் தற்போது பங்கேற்றுள்ளார்.

இந்த போட்டியானது இடைவிடாத 12 மணி நேர பந்தயமாகும். ஆனால் தற்போது துபாயில் நடைபெறுவது Michelin 24H DUBAI 2025 போட்டி. இதில் முதல் மற்றும் இறுதி போட்டி மட்டும் இடைவிடாத 24 மணி நேர பந்தயமாக நடைபெறும். இப்போட்டியானது இம்மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும்.

AJITH KUMAR RACING
ரூ.20 லட்சத்தில் அறிமுகமாகும் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி Maruti eVitara!

42 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் குறைந்த பட்சம் 240 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேலான வேகத்தில் 24 மணி நேரம் காரை இயக்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் 3 முதல் 5 கார் பந்தய வீரர்கள் இருக்கலாம். ஒவ்வொருவரும் குறைந்தது 6 மணி நேரமாவது காரை இயக்கியிருக்க வேண்டும். 24 மணி நேரம் முடிவில் எந்த அணி அதிக கிலோ மீட்டர் கார் ஓட்டி இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இதில் நடிகர் அஜித், Fabian Duffeix, Cameron Mclead, Mathieu Detry ஆகியோருடன் இந்திய அணி சார்பாக போட்டியிடுகிறார். தற்போது Qualifying Sessions நடைபெற்று வருகிறது. இப்பந்தையத்தின் போது நடிகர் அஜித்குமார் பந்தய சீசன்களில் படங்களில் கையெழுத்திட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

T69, AJITH RACING CIRCUIT
T69, AJITH RACING CIRCUITWEB

ஒரு பக்கம் நடிகர் விஜய் T69 படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தும் பந்தய சீசன்களில் படங்களில் கையெழுத்திட போவதில்லை என கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு வருடங்கள் திரைத்துறையிலிருந்து ஓய்வெடுத்து World Tour செல்லப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையிலிருந்து பிற நடிகர்களுக்கு வழி விட்டு இரு தூண்கள் விலகுவது ரசிகர்களுக்கிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர்களின் இலக்கை தேடி செல்வதை அனைவரும் வரவேற்கின்றனர்.... Michelin 24H DUBAI 2025 போட்டியில் AK பங்கேற்கவில்லை என்றாலும் அவரது AK Racing Circuit வெற்றிபெற வாழ்த்துவோம்...

AJITH KUMAR RACING
ரூ. 3.30 லட்சத்தில் அறிமுகமானது புதிய Kawasaki KLX 230!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com