\
எல்லாரும் போகலாம் 'சர்வர் சுந்தரம்'

எல்லாரும் போகலாம் 'சர்வர் சுந்தரம்'

எல்லாரும் போகலாம் 'சர்வர் சுந்தரம்'
Published on

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திற்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படத்திற்கு பின் இந்த வருடம் சந்தானம் படம் எதுவும் வரவில்லை. இருப்பினும் அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் என்கிற படத்தில் நடித்து வந்தார் சந்தானம். செஃப்பாக இப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்சாரில் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

ஏற்கனவே பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திரையில் காமெடி நாயகன் சந்தானத்தை எப்போது காண்போம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com