லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு துவங்கியது. இவ்விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே அனுமதி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
* 5000 நபர்களுக்கு மட்டும் அனுமதி
* நேரு உள் விளையாட்டு அரங்கின் கேட் நம்பர் 1 நுழைவாயிலில் சில்வர் கலர் மற்றும் கோல்டன் கலர் பாஸ்களுக்கு அனுமதி.
*கேட் நம்பர் இரண்டில் விஐபிகளுக்கும், கார் பாஸ் உடன் வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி
*கேட் நம்பர் 6 பிங்க் கலர், ரெட் கலர் பாஸ் அனுமதி்
*ஆதார் அடையாள அட்டை போட்டோ ஆகியவற்றை விஜய் மக்கள் மன்ற தலைவருக்கு அனுப்பிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது
*ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் 100 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
நேரு உள்விளையாட்டில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் முதலே அந்தப் பகுதியை ரசிகர்கள் வட்டமிட தொடங்கினர். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பிரபலங்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சிக்கு வரத்தொடங்கினர். பின்னர் சுமார் 7 மணியளவில் நடிகர் விஜய் அரங்கிற்கு வந்தார்.
”திரையுலகில் லெஜண்ட் மைக்கேல் ஜாக்சன், புருஸ் லீ தான் ஆனால், நான் நேரில் பார்த்த லெஜண்ட் நடிகர் விஜய் தான்.
லியோ படம் குறித்து நான் ஒருமுறை பேசும்போது விஜய்யை ஒருமையில் பேசி இருந்தேன்.அதனை கண்டித்து, நான் இறந்தது போல் ஒரு போஸ்டர் ஒட்டி இருந்தனர். அந்த போஸ்டரை அடித்தது விஜய் ரசிகராக இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் விஜய்யோடு இருப்பவர் வாழ்வார்களே தவிர வீழ மாட்டார்கள். அந்தப் போஸ்டர் ஒட்டியவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். நடிகர் விஜய்க்காக எனது நெஞ்சை கூட அறுத்து கொடுப்பேன்” என்று மிஷ்கின் பேசியுள்ளார்.