மொத்தம் 13 கட்! லியோவில் இவ்வளவு ஆபாச வார்த்தைகளா.. லிஸ்ட் பெருசா இருக்கே-சென்சாரில் விழுந்த மியூட்!

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது, 13 கட்களுடன் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.
LEO
LEOPT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விக்ரம் போலவே லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸின்(LCU) ஒரு அங்கமாக லியோ திரைப்படமும் இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருக்கிறார்கள். விக்ரம் படத்தில் சூர்யா சர்ப்ரைஸாக கேமியோ ரோல் செய்தது போல் லியோவில் யாராவது ஒரு நடிகர் கேமியோ செய்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கமலின் பங்கும் லியோவில் உள்ளது போல் ஒரு பேச்சு அடிபடுகிறது. அவர் டப்பிங் பேசிவிட்டு வந்ததாக தகவல்கள் கசிந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்கும் லியோ திரைப்படம் தொடர்பாக சர்ச்சைகளும் மறுபுறம் எழுந்த வண்ணம் உள்ளது. நான் வரவா பாட்டில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு ஆட்சேபனை எழுந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் விஜய் பேசிய ஆபாச வார்த்தைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தது. விஜய் போன்ற பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ஒருவர் இப்படியான ஒரு வார்த்தையை பேசலாமா என்ற கேள்வியை பலரும் முன் வைத்தனர்.

இத்தகைய சூழலில் லியோ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழானது தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

LEO
LEO

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சென்சார் சான்றிதழுடன் 13 காட்சிகளை நீக்கி U/A என்ற சான்றிதழுடன் அனைவராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இவ்விடத்தில் கூறவேண்டியது என்னவென்றால், “அடடா இவ்வளவு ஆபாச வார்த்தைகளா?” என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படத்தின் வசனங்களும், லோகேஷ் கனகராஜின் பாணியில் அதிகமான வன்முறை காட்சிகளும் இடைபெற்று இருக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது.

ஒவ்வொரு திருத்தமும் எதற்காக செய்யப்பட்டுள்ளது என்பது சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 கட் படத்தில் செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் வன்முறை காட்சிகளை அளவை குறைக்கும் வகையில் உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பல ஆபாச வார்த்தைகளுக்கு ஒலி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளின் பட்டியலை சான்றிதழில் கொடுத்துள்ளார்கள்.

13 கட்டுகள் செய்யப்பட்டு செய்யப்பட்ட பின் 2 மணிநேரம் மற்றும் 44 நிமிடங்களாக லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

ஏற்கனே திரைப்படம் தொடர்பாக உருவான சர்ச்சைகளை உறுதி செய்யும் வகையில் இது இருக்கிறது. இருப்பினும் வழக்கமாகவே இதுபோன்று சென்சார் போர்டில் நடப்பது வழக்கம் தான். இதுவெல்லாம் குறைவான கட் தான் என்று பலர் கூறுகின்றனர். சில நேரங்களில் காட்சிகளை கூட பெரிய அளவில் நீக்கச் சொல்லிவிடுவார்கள். அதனால், சென்சார் போர்டிற்கு தகுந்தாற்போல் படத்தை சரியாக எடிட் செய்தே இயக்குநர் அனுப்புவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com