வெளியானது 'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டர்!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 'லியோ' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் கன்னட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'மாஸ்டர்' வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் ஜோடி 'லியோ'வில் இணைந்துள்ளது.

லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டர்!
லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டர்!முகநூல்

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை மட்டுமே
கொடுத்துவந்துள்ள இயக்குநர் என்பதால், லோகேஷ் கனகராஜின் 'லியோ' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டர்!
“KH234 படத்தின் அப்டேட் என்ன சார்?” கமல், மணிரத்னம் முன் லோகேஷ் கனகராஜின் FanBoy சம்பவம்! #Video

'லியோ' திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, விநாயகர் சதுர்த்தி பரிசாக நேற்று 'லியோ' திரைப்படத்தின் கன்னட போஸ்டரை, படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. “Keep Calm And Plot Your Escape” என்ற டேக் லைன், விஜய்யின் மாஸான தோற்றம் போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com