பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்
பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் பழம்பெரும் இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92.

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). 1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான 'ஆத்ம கவுரவம்' படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ'விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com