ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்

ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்

ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகைகள் இரங்கல்
Published on

ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு அனுதா‌பங்களைத் தெரிவித்துக் கொண்ட நடிகை கவுதமி, அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு இந்த நாள் கருப்பு தினம் என கூறியுள்ளார். வாழ்க்கை எத்தனை சிறியது என ஸ்ரீதேவியின் மரணம் உணர்த்துவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டார். இவர்கள் தவிர இந்தி நடிகை, சுஷ்மிதா சென் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள், ‌தங்களின் இரங்கல் செய்தியை இணையதளங்க‌ளில் பதிவிட்டு ‌வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com