ஆட்டத்துக்கு ரெடியான லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆட்டத்துக்கு ரெடியான லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆட்டத்துக்கு ரெடியான லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மறைந்த விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’, ‘வாடி வாசல்’ ஆகிய இரண்டு பாடல்களும் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவை லெஜண்ட் சரவணன் பிரம்மாண்ட நடத்தி முடித்திருந்தார். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com