'சரவணா ஸ்டோர்' சரவணன் - ஊர்வசி ரவுத்தேலா நடனக் காட்சி - கவனம் ஈர்க்கும் புகைப்படங்கள்!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா உடன் நடனமாடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அவரது கடை தொடர்பான விளம்பரங்களில் நடித்து வந்தார். அவரது தோற்றத்தையும், பாவனையையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் அவர் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. இந்தப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர்.
இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக இந்த படத்தில் பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் சரவணன் ஆக்சன் காட்சிகளில் நடிப்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது, சரவணன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்பாடலின் படப்பிடிப்பு மணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.