'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் !

'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் !

'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் !
Published on

'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை இப்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு அந்தப் பதிவை இப்போது பகிர்ந்துள்ளார். 

லீனா மணிமேகலை தன் பதிவில் " 2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன "இயக்குநரை" நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது." 

"என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன். சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். அதனை வைத்து இயக்குநரை மிரட்டி அந்த மோசமான நிகழ்வில் இருந்து தப்பினேன்" என்ற நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார் லீனா மணிமேகலை.

மான நஷ்ட வழக்கு தொடருவேன் - சுசி கணேசன்

இயக்குநர் சுசி கணேசன் மீதான இத்தகைய குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சுசி கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லீனா மணிமேகலைக்கு பதிலளித்துள்ளார் அதில் "உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. சேற்றில் உருளும் பன்றி , வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள். இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே , ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும்
 புதுமைப் பெண்ணான நீங்கள் , கத்தியை அந்த அப்பாவி( ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்." 

"அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன்- என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை , உன்னைப் போன்ற metoo இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் " சமுதாய வைரஸ்களை" களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை. Social media நண்பர்களுக்கு-தயவு செய்து metoo-இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம்கண்டு தவிறுங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில் , சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்" என காட்டமாக எழுதியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com