\
லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் - சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி

லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் - சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி

லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் - சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி
Published on

கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இயக்குநர் சுசி கணேசனுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் தொடர்ந்த வழக்கில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி பணிக்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த மற்றொரு வழக்கில், பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் லீனா மணிமேகலையை ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிடலாம் என்றும் சுட்டிகாட்டினர். மேல்முறையீடு செய்தால் சைதாபேட்டை நீதிமன்ற விசாரணை தாமதமாகும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com