ட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்

ட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்
ட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்

விஜய் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ‘லீக்’ ஆகி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தளபதி63’. இதன் படப்பிடிப்பு கடந்த 70 நாட்களை தாண்டி சென்னையை சுற்றி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இது குறித்து “தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக ‘தளபதி63’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது 4வது கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். எங்களின் கடினமான உழைப்பு முழுக்க திரையரங்கங்களில் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதற்காகதான். படம் குறித்த அறிவிப்புகள், அடுத்தடுத்த செய்திகள் தக்க நேரத்தில் வெளியாகும். அதுவரை பொறுமையாக காத்திருங்கள். படம் வெளியாகும் வரை வதந்திகளை நம்பாதீர்கள்” என்று விஜயின் மேனேஜர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் விஜயின் ‘தளபதி63’ படத்தின் சில காட்சிகளுக்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் திடீர் என்று லீக் ஆகி உள்ளது. அதில் விஜய் கோப்பையை நிறுத்தி வைத்துள்ள மைதானத்தில் வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். அநேகமாக இது க்ளைமேக்ஸ் காட்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய், கழுத்தில் ஒரு கழுத்துப்பட்டை அணிந்துள்ளார். ஆகவே அவர் கதைப்படி உடல்நிலை முடியாமல் இருப்பதைபோன்ற கதையமைப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படங்களை வைத்தே கதை என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இப்படங்கள் எதுவும் அதிகாரபூர்வமானவை அல்ல. ஆகவே படக்குழு புகைப்படங்கள் கசிந்தது குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளது.

இதற்கு முன்பாக முருகதாஸ் இயக்கி வரும் ரஜினியின் ‘தர்பார்’ படங்களும் படக்குழுவினருக்கு தெரியாமல் சமூக வலைதளங்களில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com