\
ஹவுஸ் ஓனர் ஆகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஹவுஸ் ஓனர் ஆகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஹவுஸ் ஓனர் ஆகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!
Published on

’ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கப் போவதாக நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஹவுஸ் ஓனர் என்று டைட்டில் வைத்திருக்கிறார். 

இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது, ’நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படத்தை இயக்க நினைத்தேன். என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் அவளது திருமணத்துக்கு பிறகு அதை இயக்கலாம் என விட்டுவிட்டேன். நான் மும்பைக்கு சென்றிருந்த போது ஒரு இந்திப்படத்தை பார்த்தேன். அதை தமிழில் தயாரிக்க முடிவு செய்தேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை. அந்த படம் தந்த பாதிப்பில் ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் ஹவுஸ் ஓனர். ஒரு தம்பதி தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பதுதான் லைன். இதை காமெடியாக சொல்கிறேன். அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com