தமிழில் ரீமேக் ஆகிறது ’ரங்கஸ்தலம்’: லிங்குசாமி இயக்கத்தில் லாரன்ஸ்!

தமிழில் ரீமேக் ஆகிறது ’ரங்கஸ்தலம்’: லிங்குசாமி இயக்கத்தில் லாரன்ஸ்!

தமிழில் ரீமேக் ஆகிறது ’ரங்கஸ்தலம்’: லிங்குசாமி இயக்கத்தில் லாரன்ஸ்!
Published on

தெலுங்கில் ஹிட்டான ’ரங்கஸ்தலம்’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதை லிங்குசாமி இயக்க, லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

ராம்சரண், சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம், ’ரங்கஸ்தலம்’. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.
சுகுமார் இயக்கி இருந்த இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை லாரன்ஸ் வாங்கியுள்ளார். இதன் ரீமேக்கில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். லிங்குசாமி இயக்க உள்ளார். 

இப்போது ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார், லாரன்ஸ். இதில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்தபின், ’ரங்கஸ்தலம்’ ரீமேக்கில் லாரன்ஸ் நடிப்பார் என்று தெரிகிறது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com