“யாரையும் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடியவர் ரஜினி அல்ல” - ராகவா லாரன்ஸ்

“யாரையும் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடியவர் ரஜினி அல்ல” - ராகவா லாரன்ஸ்

“யாரையும் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடியவர் ரஜினி அல்ல” - ராகவா லாரன்ஸ்
Published on

தான் பேசிய பேச்சு, இனிமேல் பேசப்போகும் விஷயங்கள், ட்விட்டர் பதிவுகள் ஆகிய அனைத்தும் தனது சொந்தக் கருத்துகள் மட்டுமே என்று திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ள அவர், தனது கருத்துகளுக்கு ரஜினிகாந்த் எவ்வகையிலும் பொறுப்பல்ல என தெளிவுபடுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் சொல்லி தான் பேசுவதாக சிலர் சொல்வது உண்மையற்றது என்றும் யாரையும் தூண்டிவிட்டு பேச வைக்கக்கூடிய நபர் அவர் அல்ல என்றும் லாரன்ஸ் கூறியுள்ளார்.

தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம் எனவும் தான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே எனவும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல என்றும் யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ள லாரன்ஸ், தான் பிறந்த இடம், மொழி மற்றும் தனது சேவை குறித்து கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு சாந்தமாக பதிலளிப்பேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com