மோகன்லால் வெளியிட்ட ’நிமிர்’ டைட்டில்

மோகன்லால் வெளியிட்ட ’நிமிர்’ டைட்டில்
மோகன்லால் வெளியிட்ட ’நிமிர்’ டைட்டில்

’நிமிர்’ தமிழ் படத்தின் தலைப்பை மலையாள நடிகர் மோகன்லால் இன்று வெளியிட்டார்.

பிரியதர்ஷன் இயக்க உள்ள படம் நிமிர். இந்தப் படத்தின் தலைப்பினை மோகன்லால் சென்னையில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களை முடித்துவிட்டு இதில் உதயநிதி நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார். 
 
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக உள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குநர் ப்ரியதர்ஷன். இதில் இயக்குநர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். இருவரும் மலையாள திரை உலகில் நெருங்கிய நண்பர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com