விஷாலின் ‘லத்தி’ படத்தில் இணைந்த இசைப் பிரபலம் - படக்குழு வெளியிட்ட தகவல்

விஷாலின் ‘லத்தி’ படத்தில் இணைந்த இசைப் பிரபலம் - படக்குழு வெளியிட்ட தகவல்
விஷாலின் ‘லத்தி’ படத்தில் இணைந்த இசைப் பிரபலம் - படக்குழு வெளியிட்ட தகவல்

நடிகர் விஷாலின் ‘லத்தி’ படத்தில் பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.

‘வீரமே வாகைச் சூடும்’ படத்திற்குப் பிறகு, நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லத்தி’. அறிமுக இயக்குநர் வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஷால் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நடிகை சுனைனா, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இறுதிக் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணா ப்ரொடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் இப்படத்தை வினோத் குமார் இயக்குகிறார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக நடிகர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன்மூலம், நடிகர் விஷால், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி 12-வது முறையாக இணைந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற விஷாலின் ‘சண்டக்கோழி’ படத்தில் முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய பங்காற்றின.

இதையடுத்து விஷாலின் பல படங்களில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தநிலையில், தற்போது இந்தக் கூட்டணி 12-வது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிகர் விஷால் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com