\
சல்மான்கான் வீட்டின் முன் லத்திசார்ஜ்: ரசிகர்கள் காயம்

சல்மான்கான் வீட்டின் முன் லத்திசார்ஜ்: ரசிகர்கள் காயம்

சல்மான்கான் வீட்டின் முன் லத்திசார்ஜ்: ரசிகர்கள் காயம்
Published on

சல்மான் கானை பார்க்க கூடிய ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சிலர் காயமடைந்தனர்.

இந்தியில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது வீடு மும்பை பாந்த்ராவில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையின் போது சல்மானை ரசிகர்கள் சந்திக்க வருவது வழக்கம். அப்போது வீட்டின் மாடியில் இருந்து சல்மான் ரசிகர்களை நோக்கி கை காண்பிப்பார். பிறகு சென்றுவிடுவார். நேற்றும் அதே போல வீட்டின் முன் ரசிகர்கள் கூடினர். ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். சல்மான் கான் வீட்டில் இருந்து ரசிகர்களை நோக்கி கைகாட்டினார். 
சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் வீட்டின் காம்பவுண்டை தாண்டிக் குதிக்க முயன்றனர். பவுன்சர்கள் அவர்களைத் தடுத்தனர். சல்மான் ரசிகர்களைச் சந்திப்பதாக தகவல் பரவியதால் ஏராளமானோர் அங்கு கூடிவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், ரசிகர்களை கலைந்து போகும்படி கூறினர். யாரும் கலைந்து செல்லாததால் தடியடி நடித்தினர். இதில் சில ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com