\
வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
Published on: 

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக லதா ரஜினிகாந்த் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். அதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பை முடித்த அவர், மீண்டும் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பது போன்ற வதந்திகள் பரவின.

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான்ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முழு உடல் பரிசோதனை என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com