\
அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை -  வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்

அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை - வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்

அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை - வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்
Published on

அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஓர் உள்ளம் இல்லை என்ற பல்லவியைக் கொண்ட லதா ரஜினிகாந்த் பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பாடலை அவரே எழுதிப் பாடியுள்ளார். அன்பின் பெருமையைப் பேசும் பாடல் வரிகளில் குடியின் கேடுகளும் விவரிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி மற்றும் கோச்சடையான் படங்களில் பாடியுள்ள லதா, ஒரு கல்வியாளராகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்துவருகிறார். தன் பேரக்குழந்தைகளின் பாசமுள்ள பாட்டியான அவர், குழந்தைகளின் உலகை மிகவும் நேசிப்பவராக இருக்கிறார்.

வீடியோவில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றன. உற்சாகமாக துள்ளிக்குதிக்கின்றன. மேலும், தாய்மை உணர்வின் பெருமிதம், குழந்தைத் தொழிலாளர்கள், குடியில் மயங்கிய மனிதர்கள் மற்றும் லதா ரஜினிகாந்த் குழந்தைகளைக் கொஞ்சும் காட்சிகள் மற்றும் அவர் பாடும் காட்சிகளும்  இடம்பெற்றுள்ளன.  

மதுவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட அந்தப் பாடலில்,  “மனதை அழிப்பான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலால் கவரப்பட்ட ரசிகர்கள் முழு மனதுடன் வரவேற்று கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். நடிகர்கள் தனுஷ், ராகவா லாரன்ஸ் இருவரும் லதா ரஜினிகாந்த்தை வாழ்த்தியுள்ளனர்.  

பின்னணிப் பாடகியாக நேற்று இந்த நேரம், கடவுள் உள்ளமே, டிங் டாங், குக்குக்கூ  கூவும் உள்ளிட்ட சில திரைப்பாடல்களையும் லதா பாடியுள்ளார்.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com