சினிமா
மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி
மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி
சமீபத்தில் மறைந்த டாக்டர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை இன்று அதிகாலையில் பிறந்துள்ளது. ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சேதுராமன்.
இவர், கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் இறக்கும்போது, மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில்தான், இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த டாக்டர் சேதுராமனே மகனாக பிறந்துள்ளார் என்று திரைத்துறையினரும் குடும்பத்தினரும் சந்தோஷத்தில் உள்ளனர்.