நீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி  வெளியான கடைசிப் பாடல்

நீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்

நீதான் என் கனவு மகனே, வா வா கண் திறந்து: எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல்
Published on

பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர் கவிஞர் பழநிபாரதி. எஸ்பிபி தீவிர சிகிச்சையில் இருந்த நாட்களில் இந்தப் பாடலின் வரிகளைக் கேட்பது மிகவும் உருக்கமாக இருந்தது.

பாடல்பதிவின்போது எடுத்த படம் 

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்... திடமாய்...
எழுவாய் என் மகனே

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
மழையாய்.. கருணை
பொழிவான் இங்கு அவனே

- நீதான் என் கனவு...

சரணம்

ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இதுதான் நாம் கண்ட
உண்மை உலகில்

வலிகளை அறியாத
வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு - என்றும்
தோல்விகள் இனி இல்லை

தெய்வம் கைவிடுமா
எதும் இல்லாதான் வாழ்விலே

- நீதான் என் கனவு...

சரணம் 2

தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீகூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்

கனவும் மெய்யாகும் - அது
கற்பனை கிடையாது
அழைத்திடும் திசையெங்கும் - இனி
நீ வந்து விளையாடு

காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே

- நீ தான் என் கனவு...

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com