4 வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித்திறமையாலும், கவர்ந்திழுக்கும் நடிப்பாலும் திரை ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்திருக்கிறார். அவரது அகால மரணத்தை அவருடைய மைத்துனர் சஞ்சய் கபூர் உறுதி செய்துள்ளார். திருமண விழாவில் கடைசியாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இவை. இந்தப் புகைப்படத்தை எடுத்த அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது .