அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’: இந்திரா காந்தி கெட்டப்பில் கவனம் ஈர்க்கும் லாரா தத்தா

அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’: இந்திரா காந்தி கெட்டப்பில் கவனம் ஈர்க்கும் லாரா தத்தா
அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’: இந்திரா காந்தி கெட்டப்பில் கவனம் ஈர்க்கும் லாரா தத்தா

அக்‌ஷய் குமாரின் ’பெல்பாட்டம்’ படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ள லாரா தத்தாவின் கெட்டப் கவனம் ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ள ’பெல்பாட்டம்’வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ‘பெல்பாட்டம்’ தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 1980 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், நடிகை லாரா தத்தா இந்திரா காந்தியாக நடித்துள்ளார். நேற்று வெளியான டிரைலரில் அப்படியே இந்திரா காந்தி தோற்றத்தை பிரதிபலிக்கும் நடிகை லாரா தத்தாவை கண்டுபிடிக்காத அளவுக்கு தோற்றத்திலும் நடிப்பிலும் கவனம் ஈர்த்துள்ளார் நடிகை லாரா தத்தா. அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற லாரா தத்தா தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘அரசாட்சி’ படத்தில் நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com