\
50 லட்சம் பார்வையாளரை தாண்டியது லக்‌ஷ்மி ராய் ட்ரெய்லர்

50 லட்சம் பார்வையாளரை தாண்டியது லக்‌ஷ்மி ராய் ட்ரெய்லர்

50 லட்சம் பார்வையாளரை தாண்டியது லக்‌ஷ்மி ராய் ட்ரெய்லர்
Published on

இதுவரை 50 லட்சம் பார்வையாளர்கள் லக்‌ஷ்மி ராயின் ஜூலி ட்ரெய்லரை கண்டு ரசித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் லக்‌ஷ்மி ராய். வாமணன், காஞ்சனா, மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது. முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார். அவரது நடனத்திற்கு நல்ல மார்க்கெட் இருந்தது. பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். அடிக்கடி பெயரை மாற்றியதால் இவரை எப்படி அழைப்பது என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் பாலிவுட்டில் முதன்முறையாக தீபக் ஷிவ்தாசனி தயாரித்து, இயக்கியுள்ள ஹிந்திப் படம் ‘ஜூலி 2’. ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், லக்‌ஷ்மி ராய் நடித்திருக்கிறார். ஒரு பெண் நடிகையாக ஆவதற்கு என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதுதான் கதைக்களம்.. இதில் அதிக கவர்ச்சியாக நடித்துள்ளார் லக்‌ஷ்மி ராய். இதன் ட்ரெய்லர் வெளியான 15 நாட்களில், 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இதனால் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அறியப்படுபவராக மாறியுள்ளார், ராய் லக்‌ஷ்மி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com