\
இளையராஜா இசையமைத்துள்ள ‘கிளாப்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய லஹரி மியூசிக்

இளையராஜா இசையமைத்துள்ள ‘கிளாப்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய லஹரி மியூசிக்

இளையராஜா இசையமைத்துள்ள ‘கிளாப்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய லஹரி மியூசிக்
Published on: 

இளையராஜா இசையமைத்துள்ள ’கிளாப்’ படத்தின் ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ‘கிளாப்’ படத்தில் நடிகர் ஆதி நடித்திருக்கிறார். ஆதியுடன் ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் கைப்பற்றியிருக்கிறது. சமீபத்தில், இதே நிறுவனம் ’கேஜிஎஃப் 2’தென்னிந்திய ஆடியோ உரிமையை 7 கோடியே 20 லட்சத்திற்கு கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ஆடியோ உரிமையையும் இதே நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com