சூர்யா படத்தில் மோகன் லால்: உறுதி செய்த கே.வி.ஆனந்த்

சூர்யா படத்தில் மோகன் லால்: உறுதி செய்த கே.வி.ஆனந்த்

சூர்யா படத்தில் மோகன் லால்: உறுதி செய்த கே.வி.ஆனந்த்
Published on

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில், அவருடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் மோகன் லாலும் நடிக்க உள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நடிக்கும் இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார் சூர்யா. லைக்கா புரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடிக்க உள்ளார். இத்தகவலை கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக தமிழில் ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார் மோகன் லால். அதற்குபின் தற்போது சூர்யா படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்னதாக ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களை சூர்யாவை வைத்து இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதில் ‘மாற்றான்’ படத்திற்கு படக்குழு எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com