விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’ ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!

விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’ ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!

விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’ ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!

கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி இயக்கியுள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்னீக் பீக்’ வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன. ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’ ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகிறது.

இரு நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்த நிலையில், இன்று இப்படத்தின் ஸ்னேக் பீக் வெளியாகி இருக்கிறது. அதில், திருமணமான விஜய் சேதுபதி வேறு பெண்ணுடன் போனில் பேசுவதற்காக மாடியில் இருக்கும் தனது மாமனாரை கீழே அனுப்பிவிட்டு காதலியுடன் பேசத்தொடங்குவதோடு ஸ்னீக் பீக் முடிவடைகிறது.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அமலாபால், விஜய் சேதுபதி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com