நலன் குமாரசாமி உள்ளிட்ட 4 இயக்குநர்களின் ‘குட்டி லவ் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நலன் குமாரசாமி உள்ளிட்ட 4 இயக்குநர்களின் ‘குட்டி லவ் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நலன் குமாரசாமி உள்ளிட்ட 4 இயக்குநர்களின் ‘குட்டி லவ் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

நான்கு முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ ஆந்தாலஜி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகின்றன. ‘புத்தம் புதுகாலை’, ‘பாவகதைகள்’ ஆகியவற்றை தொடர்ந்து வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழின் முன்னணி இயக்குநர்களான நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு, கெளதம் மேனன், ஏ.எல் விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி லவ் ஸ்டோரி’ வெளியாகவுள்ள. இதனையொட்டி, இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில், அமலாபால், விஜய் சேதுபதி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நலன் குமாரசாமியின் ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்துபோகும்’ படங்களில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள், ரசிகர்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com