பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால் டீசர் வெளியீடு: எம்.ஜி.ஆர் என்ன பேசுகிறார் தெரியுமா?

பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால் டீசர் வெளியீடு: எம்.ஜி.ஆர் என்ன பேசுகிறார் தெரியுமா?
பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால் டீசர் வெளியீடு: எம்.ஜி.ஆர் என்ன பேசுகிறார் தெரியுமா?

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்தார். அப்படமும் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் குதிரைவால். இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் இப்படத்தை இயக்க கலையரசனுக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார்.

டீசரில், மலைப்பகுதியில் குதிரை ஒன்று வால் இல்லாமல் நிற்கிறது. கலையரசன் கனவில் தூங்கிக்கொண்டிருக்க, இன்று அதிகாலை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவரது இல்லமான ராமாவரம் தோட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வாசிப்பு பெண் குரல் கேட்கிறது. அதோடு எம்.ஜி.ஆர் குரலில் கலையரசன் ’த பொண்ணு உன்னைத்தான். குதிரை பார்க்க இவ்ளோ அழகா இருக்கே? ஆனா அதுக்கு வால் இல்லையே? எங்கம்மா போச்சி?’ என்று கேட்டுக்கொண்டே துங்கி எழுகிறார். அவரது பின்பிறத்தில் குதிரையின் வால் இருக்கிறது. மிகவும் வித்தியாமாக உள்ள இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுக்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com