நடிகர் சங்கத் தேர்தலில் குஷ்பு போட்டி

நடிகர் சங்கத் தேர்தலில் குஷ்பு போட்டி
நடிகர் சங்கத் தேர்தலில் குஷ்பு போட்டி

நடிகர் சங்கத் தேர்தலில் நடிகை குஷ்பூ போட்டியிடவுள்ளார். நாசர், விஷால் அணியில் போட்டியிடுவோர் பட்டியலில் குஷ்புவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடக்கவுள்ளது. இதில், தலைவர் பதவிக்கு நாசர், பொதுசெயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோருடன், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களோடு பாண்டவர் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகை குஷ்பூ, கோவை சரளா, நடிகர் பிரசன்னா, பசுபதி, ரமணா, நந்தா, சோனியா போஸ், மனோபாலா, பிரேம்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

அதேபோல், ஆதி, ஜூனியர் பாலையா, லதா, சரவணன், நித்தின் சத்யா, அஜய்ரத்தினம், ஹேமச்சந்திரன் போன்ற சினிமா நடிகர்களுடன் 5 நாடக நடிகர்களும் போட்டியிடவுள்ளனர். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான மனுக்கள் நாளை வழங்கப்படும் எனவும், பூர்த்தி செய்த வேட்புமனுக்களை 8-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி மாலை 5 மணி வரை நடிகர் சங்க அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com